மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் தன்னை வெற்றி பெறச் செய்த மணப்பாறை மக்களின் அன்பையும் ஆதரவையும் நன்றியுடன் நினைவுகூர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ரா. கதிரவன் அவர்கள், மணப்பாறை மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளையும், தொகுதியின் வளர்ச்சிக்குத் தேவையான முக்கியமான திட்டங்களையும் சட்டமன்றத்தில் எடுத்துரைத்தார்.
Author: admin
-

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அண்ணன்.!
தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான தங்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், மக்கள் நலப் பணியில் மேலும் பல சாதனைகள் படைத்து சிறப்புடன் வாழ மனமார்ந்த வாழ்த்துகள்.!
R.கதிரவன் BE.,MLA.,
மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர்
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர். -

மக்களின் சேவையை எளிதாக்க புதிய செயலி தொடக்கம்
மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் திரு ஆர் கதிரவன் BE அவர்களை T.சுப்ரநாதன் B.E சந்தித்து தொகுதி மக்களின் கோரிக்கைகளை எளிமையாக பதிவு செய்து அதன் முன்னேற்றத்தை கண்காணிக்கும் விதமாக சட்டமன்ற உறுப்பினரின் இணையதளத்தின்(demo) செயல்முறை விளக்கத்தினை வழங்கினார். மக்கள் சேவையை எளிமையாக்கும் இந்த முயற்சி விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது

-

பள்ளி மாணவர்களின் நலன் கருதி புதிய வழித்தட பேருந்து சேவை தொடக்கம் மணப்பாறை எம்எல்ஏ கதிரவன் தொடங்கி வைத்தார்
இன்று இனாம் புதுவாடி ஊராட்சி குமாரம்பட்டிக்கு நீண்ட நாள் கோரிக்கையான பேருந்து வசதி இயக்க வேண்டும் என்று ஊர் பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் கோரிக்கை வைத்தனர் இதனை ஏற்று இன்று சரியாக 4.10 மணிக்கு புதிதாக அறிமுகப்படுத்தி இயக்கப்பட்ட பேருந்தை மாவட்ட செயலாளர் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் எம்எல்ஏ அண்ணன் ஆர் கதிரவன் அவர்கள் துவக்கி வைத்து அதில் மாணவர்களுடன் பயணம் செய்து கலந்துரையாடினார் ஊர் பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் வேலைக்கு செல்லும் இளைஞர்களும் அண்ணன் ஆர் கதிரவன் அவர்களுக்கு தனது நன்றியினை தெரிவித்தனர் மக்கள் பணியே முதன்மை

